‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, November 21, 2012

பணத்தால் வாங்க முடியாத எட்டு


01. புத்தகத்தை வாங்கலாம்; அறிவை வாங்க முடியாது
02. உணவை வாங்கலாம்; பசியை வாங்க முடியாது
03. பகட்டை வாங்கலாம்; பண்பாட்டை வாங்க முடியாது
04. படுக்கையை வாங்கலாம்; உறக்கத்தை வாங்க முடியாது
05. கேளிக்கைகளை வாங்கலாம்; மகிழ்ச்சியை வாங்க முடியாது
06. ஆயுதங்களை வாங்கலாம்; வீரத்தை வாங்க முடியாது
07. வேலைக்காரர்களை வாங்கலாம்; சேவை மனப்பான்மையை வாங்க முடியாது
08. அமைதியான சூழலை வாங்கலாம்; ஆனால் மனச்சாந்தியை வாங்க முடியாது.

No comments:

Post a Comment

What's in your mind?