‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, October 23, 2012

ஒரு திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் ராதா...


''நாட்டில் கழிப்பறைகளின் எண்ணிக்கையைவிட கோயில் களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறாரே?'
''தமிழகத்தில் எம்.ஆர்.ராதா திராவிடர் கழகக் கொள்கை களைத் தனது திரைப்படம், நாடகம் மூலம் பரப்பிவந்த சமயம் அது. ஒரு திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் ராதா, ஒரு கோயிலைப் பார்வையிடச் செல்கிறார். அப்போது கோயிலின் தர்மகர்த்தா அவரை வரவேற்று, கோயிலைச் சுற்றிக் காண்பிக்கிறார். இது மடப்பள்ளி; இது மூலஸ்தானம்; இது உற்சவ மூர்த்தி தங்கும் அறை; இது பள்ளியறை என்பதற்கெல்லாம்  தலையாட்டிக்கொண்டே வருபவர் சற்று யோசித்துவிட்டுக் கேட்பார், 'ஆமா! எல்லாம் சரி.. கக்கூஸ் எங்க இருக்கு?’ அப்போது தியேட்டரே கை தட்டி ஆர்ப்பரித்தது. இப்போது புரிந்திருக்குமே, கழிப்பறை களின் எண்ணிக்கையைக் கோயில்களின் எண்ணிக்கையை விட அதிகமாக்கும் வழி எது என்று!'
- விஜயலட்சுமி, பொழிச்சலூர்

No comments:

Post a Comment

What's in your mind?