‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Monday, June 1, 2015

J.K. - சிற்சபையின் பெருஞ்சபேசனாக, நடுவே ஜெயகாந்தன்

Ananda Vikatan 22/04/2015


வைரமுத்து
ஒருமுறை அவரைச் சாப்பாட்டுக்கு அழைத்துப் போயிருந்தேன். எங்கள் உரையாடலின் நிறைவில் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். 'நீங்கள், மரபு மீறிய வாழ்க்கையை வாழ்ந்துவந்திருக்கிறீர்கள். பல நேரங்களில் பலரைக் காயப்படுத்தி இருக்கிறீர்கள். காயப்படுத்துவது உங்கள் நோக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், காயம் என்னவோ நிஜம். நீங்கள் வாழ்ந்த வாழ்வில் எதை நினைத்தாவது வெட்கப்பட்டது உண்டா? அது செய்திருக்கலாகாது என நினைத்த சம்பவங்கள் எவை?’ என்றேன். ரொம்ப நிதானமாக அவர் சொன்ன பதில் எனக்குப் பிடித்திருந்தது. 'நான் ஒருபோதும் வெட்கப்பட்டது இல்லை. நான் ஒருபோதும் எதையும் அவமானகரமாகக் கருதியது இல்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்ததந்த நேரத்து நியாயம்’ என்றார்; வியந்தேன்


ஜே.கே., ஓர் அற்புதமான பாடலாசிரியர். 'பாதை தெரியுது பார்’ படம் தோல்வி; பாட்டு வெற்றி. காரணம், ஜே.கே. அதில் அவர் எழுதிய 'தென்னங்கீற்று
ஊஞ்சலிலே...’ இப்போது கேட்டால்கூட சுகானுபவம். பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜானகி குரல்களில் இன்று வரை ரீங்காரமிடுகிற பாடல். அடுத்து, 'வேறு இடம் தேடிப் போவாளோ...’ என்ற அழகான பாடல். அதில் 'நூறு முறை இவள் புறப்பட்டாள்...’ என்றவர், 'விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்...’ என முடித்திருப்பார். அந்த 'நூ’வில் எந்தக் கவிஞனும் மாட்டுவான். அது அவனே அவனுக்கு வைத்துக்கொள்கிற கண்ணி. மோனைக்குப் பஞ்சமான முதல் எழுத்தில் தொடங்கிவிட்டு முடிப்பதற்குள் விழி பிதுங்குவார்கள் பலர். ஆனால், 'நூலிழையில்’ என்ற மோனையிட்டு அதில் இருந்து லாகவமாக வெளியேறியிருப்பார். தொழில்முறைப் பாடலாசிரியன் செய்வதை, அவர் செய்திருப்பார்

ஒருமுறை தேர்தலில் நின்றார். படுதோல்வி. 'ஏன்?’ எனக் கேட்டதற்கு, 'என் வாக்கை நான் எனக்கே போட்டுக்கொள்ள வேண்டாமா? அதற்குத்தான்’ என்றார். இப்படிப் பல்வேறு சமயங்களில் அவர் சொன்ன கூற்றுகள் வெகுபிரபலம். 'எனக்குத் தமிழ் தெரியாது. ஆனால், தமிழுக்கு என்னைத் தெரியும்’. இது அவரின் கூற்றுகளில் மிகவும் புகழ்பெற்ற வாசகம். பாரதிராஜா 'ஒரு கைதியின் டைரி’ என்ற தலைப்பில் படம் எடுத்தபோது ஒரு கவிஞர், 'அது என் கவிதைத் தொகுப்பின் தலைப்பு’ எனக் கூறி இழப்பீடு பெற்றார். அதே பாரதிராஜா, 'புதிய வார்ப்புகள்’ என்ற தலைப்பில் படம் எடுத்தபோது, 'இது உங்கள் கதையின் தலைப்பாயிற்றே’ என ஜெயகாந்தனிடம் கூறி இருக்கிறார்கள். அதற்கு ஜே.கே., 'இல்லாதவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இதில் என்ன இருக்கு?’ என்றாராம்.

இளையராஜா

இப்போ நான் எதுவும் எழுதுறது இல்லை. ஓர் எழுத்தாளனுக்கு வாழ்க்கை எவ்வளவு நீளமானது என்பது கணக்கு அல்ல. அது எவ்வளவு கூர்மையாக இலக்கை நோக்கிப் போய், மக்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதுதான் கணக்கு. நான் நல்லவனா... கெட்டவனா? 'கெட்டவன்’னு சொன்னா... அது இந்தச் சமூகம் எனக்குக் கொடுத்த சலுகை. 'நல்லவன்’னு சொன்னா, அதுக்கும் இந்தச் சமூகம்தான் காரணம். இந்தச் சமூகம் நமக்கு என்ன அனுபவத்தைக் கொடுக்குதோ அதைத்தான் நாமும் இந்தச் சமூகத்துக்குக் கொடுக்க முடியும்’ எனச் சொல்லிச் சிரித்தார்.

ஜே.கே. சில குறிப்புகள்தொகுப்பு: தமிழ்மகன்
'குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு; அவமதிப்பது வேறு. தண்டிக்கும்போது 'குற்றவாளி’ மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும். அவமதிக்கிறபோது மனிதனே அவமதிக்கப்படுகிறான். ஒரு தனிமனிதக் குற்றவாளியைப் பகிரங்கமாக அவமதிக்கிறவர்கள்... அந்தக் குற்றம்புரிந்தவனைவிடவும் கொடியவர்கள்!’ 

 'இந்தத் தேர்தல் முறையில் தவறாக முத்திரை குத்தப்பட்ட ஓட்டுக்கள் மட்டும் செல்லாதவை அல்ல; தோற்ற ஓட்டுக்கள் எல்லாமே சொல்லாதவை ஆகின்றன. இது அதர்மமானது. '500 ஓட்டுக்கள் வாங்கியவன் சகல மரியாதைகளோடும் பதவிக்குப் போவான். ஆனால்,499 ஓட்டுக்கள் வாங்கியவன் எந்தவித அங்கீகரிப்பும் இல்லாமல் செல்லாக்காசாகிப்போவான்’ என்பது என்ன நியாயம்? இது சூதாட்டம் அல்லவா? இது எப்படி மக்களுடைய பிரதிநிதித்துவம் ஆகும்?’

'காதல் என்பது, நமது கதைகளைப் பொறுத்தவரை இருவர் செய்துகொள்ளும் நிச்சயதார்த்தம். 'உன்னை நான் காதலிக்கிறேன்’ எனச் சொன்ன பாவத்துக்காக அவன், அவளையே கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது செத்துப்போக வேண்டும். விவகாரத்தைக்கூட அனுமதிப்பார்கள்போல் இருக்கிறது. இந்தக் காதல் ரத்தை ஒருத்தி பிரயோகித்தால், நமது பண்பாடு கெட்டுப்போகும் எனச் சொல்கிறார்கள்!’
செழியன்
தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா?’ என ரவி கேட்டார்.
'தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான் நான் எழுதினேன்’ என்றார்.


Writer Jayakanthan : Documentary by Ravi Subramanian
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் -

No comments:

Post a Comment

What's in your mind?