‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Monday, June 1, 2015

Ananda Vikatan 22/4/2015 - Maniratnam Interview

கி.கார்த்திகேயன், ம.கா.செந்தில்குமார்

'' 'மௌனராகம்’ல ஆரம்பிச்சு 'ஓ காதல் கண்மணி’ வரைக்கும் ஒவ்வொரு டிரெண்டுக்கும் உங்களைப் பொருத்திக்கிறீங்க. எப்படி உங்களை அப்டேட் பண்ணிக்கிறீங்க?''

''நான் அதுக்குனு தனியா எதுவும் கோர்ஸ் படிக்கிறது இல்லை. அப்படி யாரும் பண்ணவும் முடியாது. சும்மா கண்ணைத் திறந்து வெச்சிருந்தாலே போதும். சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம். முன்னாடி என்கிட்ட பேட்டி எடுக்கிறப்போ, டிரான்சிஸ்டர் சைஸ் வாய்ஸ் ரிக்கார்டர் கொண்டு வருவாங்க. ஆனா, இப்போ நீங்க ஸ்மார்ட் போன்லயே எல்லா வேலைகளையும் முடிச்சுடுறீங்க. இப்படி நம்மளைச் சுத்தி இருக்கிற குடும்பம், குழந்தைகள், நண்பர்கள்னு எல்லாரையும் கவனிச்சுட்டே இருந்தாலே போதும். உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம். ஆனா, அந்த மாற்றங்களை நாம அக்செப்ட் பண்றோமா இல்லையா... அங்கேதான் நாம அப்டேட் ஆகிறோமா இல்லையாங்கிறது தீர்மானிக்கப்படும். 'இது என்ன இப்படிச் சொல்றாங்க. முன்னாடி இப்படிக் கிடையாதே...’னு யோசிச்சாலோ, 'இது சரி... இது தப்பு...’னு எதுக்கெடுத்தாலும் தீர்ப்பு சொன்னாலோ... நாம அப்டேட் ஆகத் தயார் இல்லைனு அர்த்தம். எந்த மாற்றமும் நம்ம அனுமதிக்காகக் காத்திருக்காது. அது மாறிட்டே இருக்கும். அந்த மாற்றம் நம்மளை அனுமதிக்குதானு மட்டும்தான் நாம பார்க்க முடியும். நான் ஒவ்வொரு மாற்றத்தையும் ரசிச்சு ஏத்துக்கிறேன்!''  

No comments:

Post a Comment

What's in your mind?