‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Saturday, March 28, 2020

25, vadakkuth theru

நினைவலைகள் பகுதி 1

25, வடக்குத் தெரு, கண்ணா வீடு(கிராமத்தில் என்னை அழைக்கும் பெயர் கண்ணன்)

எங்கள் வீட்டின் விலாசம். 1905ல் கட்டியதாக தாத்தா கூறினார். எழுபதுகளில்(1970)நான் வாழ்ந்த வீடு, கிராமத்து வீடு மனக்கண் முன் வந்து வந்து போகிறது. வீட்டின் அமைப்பை பற்றி சொல்லத் தோணுகிறது. இது இன்றைய இளைஞர்களுக்கான பதிவு. ஒரு நூற்றாண்டுக்கு முன் வீட்டின் அமைப்பு பற்றி தெரிவதற்காக.

வீட்டுக்கு எதிரே களம், வயலில் இருந்து வரும் நெற்கதிர்கள் அடிக்கும் இடம். அதில் மேல் இடக்கை பக்கத்தில் எட்டு உயரமான (எட்டு  அடி இருக்கும்) கற்கள் இருக்கும், மேலே ஓடு வேய்ந்திருப்பர்கள். மாட்டுத் தொளுவு. இரண்டு காளை மாடு இருந்தது. அந்த களத்தில் அஇருக்கும் றுப்பு நேரம் போக மீத காலத்தில் வைக்கோல் போர். கீழ் வலக்கை அருகே உரக் குழி இருக்கும். சாணம் மற்றும் குப்பைகள் சேர்க்கப்படும் பின்பு உரமாக வயலுக்கு கொண்டு செல்லப்படும். பக்கத்து வீடுகளுக்கு வேண்டுவோர் எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்வர்.

களம தாண்டி அடியில் தெரு இருக்கும். பின் வடக்குத் தெரு வீடு ஆரம்பிக்கும். ஒன்பது படி ஏறி பத்தாவது அடி எடுத்து வைத்தால் வீட்டின் வாசலுக்கு நுழையலாம். தெருவில் செல்வோர் ஓய்வெடுக்க இரு புறமும் திண்ணையுண்டு, கல்லால் ஆன தலையனையுடன.  மேலே விளக்கு வைக்கும் மாடமும் உண்டு.


No comments:

Post a Comment

What's in your mind?