‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, August 1, 2014

வைரமுத்து 60 கேள்விகள்

மனிதனின் உண்மை முகம் எது?''
''எந்தத் துறையில் ஒருவன் பொருள் ஈட்டினானோ அல்லது புகழ் ஈட்டினானோ, அந்தத் துறையைக் கழித்துவிட்டு மிச்சப்படுவது எதுவோ அது!''

'கண்ணதாசன், வாலி வரிகளில் பிடித்தவை?''
''நூற்றுக்கணக்கில் சொல்லலாம்...
'ஏழைகளின் ஆசையும்
கோவில்மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது?  - தர்மமே
மாறுபட்டால் எங்கு செல்வது?’ - இது கண்ணதாசன் வரிகள்.
'மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா?
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா? ’ - இது வாலி வரிகள். இன்னும் இப்படி எத்தனையோ!''

உங்கள் வர்ணனையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?''
'' 'சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்.
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’!''

புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்போது என்ன எழுதித் தருவீர்கள்?''
''சிறகிருந்தால் போதும்
சிறியதுதான் வானம்!''

''மறக்க முடியாத வாசகம்?''
''குடலில் ஒரு அவுன்ஸ் மலமும், மூளையில் ஒரு அவுன்ஸ் அவமானமும் மிச்சம் இல்லாத மனிதன் எவனும் இல்லை!''

'நீங்கள் ரசித்துக்கேட்ட அனுபவ மொழி?''
''முஸ்லிம் பெரியவர் ஒருவர் சொன்னது: 'நீ ராஜாவோ... பிச்சைக்காரனோ... உண்டது, உடுத்தது, கொண்டது, கொடுத்தது... இந்த நாலும்தான் மிச்சம்’!''

No comments:

Post a Comment

What's in your mind?