‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, August 5, 2014

யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது!

இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே... ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்கள்.
10 சதவிகித கார்பன் கனிமங்கள் தன்னிச்சையாகப் பலவற்றோடு கலந்து உயிர் தோன்றுவதற்குத் தேவையான சர்க்கரை, கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை உருவாக்குகின்றன என்பதுதான் இவர்களது கண்டுபிடிப்பு.  இத்தனைக்கும் மீத்தேனில் மட்டும்தான் கார்பன் இருக்கிறது. கார்பன் எதுவோடு வேண்டுமானாலும் கலக்கும் சக்தி கொண்டது என்று கண்டுபிடித்தார்கள். பூமியில் இரண்டு விழுக்காடு மட்டும்தான் கார்பன் இருக்கிறது. நம் உடலிலோ அது 20 விழுக்காடு. பூமியில் கார்பனைப்போல எத்தனையோ மடங்கு சிலிக்கான் இருக்கிறது. ஆனால், கணினியில் சில்லு செய்யப் பயன்படுத்தும் சிலிக்காவை, மனிதனின் செல்லைச் செய்ய இயற்கை தேர்ந்தெடுக்கவில்லை. யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது என்று இதனால்தான் சொல்கிறோம்!
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 

No comments:

Post a Comment

What's in your mind?