‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, August 5, 2014

மற்ற உயிரினங்கள் தோற்றுப் போனதற்கும் மனிதன் வெற்றி பெற்றதற்கும் மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு.    
ஒரு சிங்கம் காட்டைப் பற்றி ஓர் அங்குலம் விடாமல் அறிந்து வைத்திருந்தாலும், அதை அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்திவிட்டுச் செல்ல முடியாது. அதன் அத்தனைத் திறமையும் அதன் மரணத்தோடு சமாதியாகிவிடுகிறது. மனிதன் அவனுடைய அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடிந்தது. அதற்குக் காரணம் மற்றவற்றுக்கு இல்லாத நம்முடைய பேசும் ஆற்றல்.
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 

No comments:

Post a Comment

What's in your mind?