‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Wednesday, August 6, 2014

மனிதன் அவன் உடலை அறிய ஆரம்பித்தான் 
குரங்குகளைத் தவிர மற்ற விலங்குகளுக்கு இனிப்பின் சுவை தெரியாது. ஒரு நாய்க்கு அரை கிலோ சாக்லேட் போட்டால், அது அத்தோடு காலி. எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு வாரம் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் வளர்க்கும் பூனைக்கு ஒரு டஜன் வாழைப்பழத்தைப் போட்டுவிட்டுப் போனார்.  ஊரில் இருந்து திரும்பி வந்து கதவைத் திறந்தால், ஒரே அழுகல் நாற்றம். வீட்டை விட்டு ஓடிய பூனை அதற்குப் பிறகு திரும்பி வரவே இல்லை.
குரங்குகளோடு மரபணு ஒத்திருப்பதால், நமக்குப் பழங்களின் சுவையும் தெரியும். விலங்குகளை வேட்டையாடி பச்சையாக தொடக்கத்தில் உண்ணும்போது, அவற்றின் உடல் சூட்டை அவன் உணர முடிந்தது. சூடாக இருக்கும்போதே சாப்பிட்ட அவன், நாளடைவில் சைவ உணவையும் சூடாக சாப்பிடக் கற்றான். பழங்களைத் தின்ற பழைய மரபணுவால், அவனுக்கு துவர்ப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு என்ற அத்தனை சுவை மொட்டுகளும் வந்ததோடு, ஆவி பறக்கச் சூடாக உண்ணும் பழக்கமும் வந்தது.  
மனித உடலில் இன்னும் புலப்படாத மர்மங்கள் இருக்கின்றன. மற்ற விலங்குகளுக்கு அவற்றின் உடலில் இருக்கும் உறுப்புகளின் விவரம் தெரியாது.   சின்ன காயம் ஏற்பட்டால், அவை கிருமிகளின் வசப்பட்டு மண்டையைப் போட்டுவிடும். மனிதன் மட்டும் அவன் உடலை அறிய ஆரம்பித்தது விசித்திரமான பயணத்தின் தொடக்கம்!
மனிதன் உடலைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியது அவன் சிந்திக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட சிலிர்ப்பான  உணர்வு. விலங்குகளின் உடலுக்குள் இருக்கும் பாகங்கள் அவனுக்கு மாமிசப்பட்சிணியாக ஆனபோது தெரிய ஆரம்பித்தன.  அவன் கும்பலைச் சார்ந்தவர்கள் விலங்குகளுக்குப் பலியாகும்போதும், அவை சாப்பிட்டு மீதமிருக்கும் பாகங்களை அவன் பார்க்க நேர்ந்தபோதும் தெளிவு உண்டானது.  அப்போதுதான் உடலைப் பற்றிய புரிதல் அவனுக்குப் பிடிபட ஆரம்பித்தது.  அவனுடைய கைகளைப் பயன்படுத்தும் விதங்களை இன்னும் அவனால் மெருகேற்ற முடிந்தது. காடுகளில் திரிந்தபோது அவன் அதிகமான நோய்களைச் சந்திக்கவில்லை. நிலையாகத் தங்கிய பிறகு அவன் உடல், குறைபாடுகளுக்கு ஆளாகத் தொடங்கியது.
மனிதன் மாறி விட்டான்!, இறையன்பு 

No comments:

Post a Comment

What's in your mind?