‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Sunday, June 17, 2012

நான் இந்தியன் - ஓர் இந்துக் குடும்பம், 2000 கோயில்களுக்குச் சமம்!

ஓர் இந்துக் குடும்பம், 2000 கோயில்களுக்குச் சமம்!


மனைவி கருவுற்றால், அவள் கருவுற்றிருப்பதை மாமியார் அறிந்துதான் மகனுக்குச் சொல்வாளே தவிர, மனைவியே சொல்வதில்லை. அது திருமணத்துக்குப் பின்வரும் ‘தோன்றா நாணம்‘ எனப்படும். அஃதன்றியும் தன் கணவனைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிடும் நேரம் வரும்போது, ’என் கணவர்’ என்றோ, ‘என் அத்தான்’ என்றோ கூறுவதில்லை. தன் குழந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவன் தகப்பனார்’ என்று சொல்வது வழக்கம். அது கணவனுக்கும், உலகத்துக்கும் செய்யும் சத்தியமாகும்.
‘தாய் அறியாத சூல் உண்டோ?’ என்பர். ‘தான் கருவுற்றது தன் கணவனுக்கே’ என்று அவள் சத்தியம் செய்கிறாள்.
இல்லறத்தில் அற்புதமான சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தது இந்து தர்மம். அவ்வப்போது வரும் கோப தாபங்களை நீக்கி விட்டுப் பார்த்தால், ஓர் இந்துக் குடும்பம், இரண்டாரயிரம் கோயில்களுக்குச் சமம்!
- அர்த்தமுள்ள இந்து மதம், கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment

What's in your mind?