‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Friday, June 15, 2012

நான் இந்தியன்----சூப்பர் கூட்டணி

சூப்பர் கூட்டணி



இந்தியர்களின் உணவு வகைகளில் தானியங்களுக்கும், பருப்புக்கும் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்த தானியம் + பருப்பு கூட்டணி பற்றி ஆய்வு செய்த வெளிநாட்டு அறிஞர்கள் வியந்து போயிருக்கிறார்கள். காரணம்... இதன் கச்சிதம்.



நம் பாரம்பரிய உணவான பொங்கலில், அரிசியும் பாசிப்பருப்பும் இருக்கிறது. அரிசி சாதத்துக்கு சாம்பாரில் துவரம் பருப்பு சேர்க்கிறோம். இட்லி, தோசையில் அரிசியோடு உளுத்தம் பருப்பு ...இணைகிறது. சப்பாத்தியோடு பருப்பு கூட்டு சேர்த்து சாப்பிடுகிறோம்.



உடலின் இயல்பான செயல்பாட்டுக்கு 20 அமினோ அமிலங்கள் தேவை. இவற்றை அத்தியாவசியமானவை, அத்தியாவசியமற்றவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர். இதில், இரண்டாவது வகையை உடல் தானாகவே உற்பத்தி செய்து கொள்கிறது. அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் வெளியில் இருந்து உணவாக வந்தால்தான் உண்டு. இவை தானியங்களிலும், பருப்புகளிலும்தான் அதிகம். அரிசி, பருப்பு இரண்டையும் கலந்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான கச்சிதமான கலவை கிடைத்து விடுகிறது.

..

No comments:

Post a Comment

What's in your mind?