‘தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Tuesday, June 26, 2012

இக்கணத்தில் வாழு!



 
துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு, இன்பமாக வாழவேண்டும் என்பதற்கான வழிதேடி, அரண்மனையை விட்டு சித்தார்த்தன் வெளியேறியபோது அவனுக்கு வயது 29. முதலில், யோக மந்திரமுறைகளை முழுமூச்சு டன் கற்று, தேடிப் பார்த்தான். தேடிய விடை கிடைக்கவில்லை. அடுத்ததாக, உணவு, உறக்கம், ஓய்வு என எல்லா வற்றையும் துறந்து, உடலை வருத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தான். கிட்டத்தட்ட மரணத்தின் வாசலைத் தொட்டபோதுதான், தன் தேடலுக்கான விடை தியானத்திலும் இல்லை எனக் கண்டுகொண்டான்.

தன் ஆறு வருட கால தியானத் தேடல் வீணாகிப்போனதே என்ற எண்ணத்தில் இருந்தபோது, பணிப் பெண் பால்சோறு கொண்டுவந்தாள். மிக நீண்ட நாட்கள் கழித்து உணவை அனுபவித்துச் சாப்பிட்டபோது, சித்தார்த்தன் மனதில் ஒரு மின்னல் மின்னியது. தன் தேடலுக்கான விடை கிடைத்தது போல் இருந்தது. உடனே, அரண்மனையை விட்டுக் கிளம்பிப் போய், போதி மரத்தடியில் அமர்ந்தான். இத்தனை நாட்களாக வெளியில் தேடிக்கொண்டு இருந்த விடையை தனக்குள் தேடத் தொடங்கினான். 49 நாட்கள் கடந்து ஒரு பௌர்ணமி தினத்தில் தேடலுக்கு விடை கிடைத்தது. மனிதகுலம் முழுவ துக்கும் இன்பம் தரக்கூடிய மந்திரச் சொல் 'இக்கணத்தில் வாழு' என்பதாக உதித்தது...

... வாழ்வின் எல்லா துன்பங்களையும் தீர்த்துப் புது வழி காட்டும் அவரது 'இக்கணத்தில் வாழு' என்னும் மந்திரச் சொல்லின் மகத்துவம், வாழ்வின் ஒளிவிளக்காக மனிதர் களுக்குக் காலமெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

- 'மந்திரச் சொல்' நூலில் இருந்து.

No comments:

Post a Comment

What's in your mind?